How to build a house_Veedu kattum murai_வீடு கட்டுவதற்கான வழிமுறை
ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு கனவு. ஆனால் சரியான படிநிலைகள் பின்பற்ற வேண்டும் இல்லையெனில் திட்டமிட்ட பட்ஜெட் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.அதனால் முன் திட்டமிடல் முக்கியமானது.ஒரு வீட்டைக் கட்டுவதற்கான வழிமுறையைப் பார்ப்போம்.
1.நிலம் வாங்குதல்_ Buy a land
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிலத்தை வாங்க வேண்டும் ( approved plot ).
2.வீட்டின் வரைபடம்_ house plan
முதலில் வீட்டின் வரைபடத்தை தயார் செய்யவும்.வாஸ்து நம்பிக்கை உள்ளவர்கள் வாஸ்து படி வீட்டின் வரைபடத்தை தயார் செய்யவும்.
3. கட்டிட அனுமதி_Building approval.
நிலம் சம்பந்தப்பட்டுள்ள நிர்வாக அலுவலகம் சென்று வரைபடத்தை கொடுத்து வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி பெறவேண்டும்.
4. குடிநீர் இணைப்பு_Borewell
வீடு கட்டப்பட உள்ள நிலத்தில் குடிநீர் bore போட வேண்டும்.
5. மின்சார இணைப்பு_EB Connection.
சம்பந்தப்பட்ட EB அலுவலகம் சென்று மின் இணைப்பு பெறவேண்டும். அந்த இணைப்பு தற்காலிகமானது ( Temporary connection ). வீட்டின் கட்டுமானத்தை முடித்த பிறகு அதை நிரந்தரமான மின் இணைப்பாக மாற்ற வேண்டும்.
6. நிலத்தை சுத்தம் செய்ய வேண்டும்_ Clean the land
நீண்ட நாட்களுக்கு முன்பு இடம் வாங்கி இருந்தால் அதை சுத்தம் செய்ய வேண்டும். நிலத்தை மேடு பள்ளம் இல்லாமல் நிலத்தை சமன் செய்ய வேண்டும்.
7. அடித்தளம்_Foundation
வரைபடத்தை கொண்டு Pillar வரும் இடத்தை mark செய்து குறைந்தபட்சம் 4 அடி ஆழம் எடுக்க வேண்டும். அதற்கு பிறகு rcc mat போட்டு அடித்தளம் அமைக்க வேண்டும். அடித்தள பள்ளத்தை மூடிய பிறகு தரைமட்டத்தில் பெல்ட் ( GRADE BEAM ) போட வேண்டும்.
8. பேஸ்மென்ட்_Basement
அடித்தள பெல்ட்டின் மேலே கட்டுவேலை செய்ய வேண்டும். பேஸ்மென்ட் கட்டுவேலையின் உயரம் சாலையின் உயரத்தை விட குறைந்தபட்சம் 3 அடி உயரம் இருக்க வேண்டும். அதற்கு பிறகு பேஸ்பெல்ட் ( PLINTH BEAM ) போட வேண்டும். பேஸ்பெல்ட் மேலே வீட்டின் சுவர் கட்ட வேண்டும். பெல்ட் ( BEAM ) இல்லாமல் சுவர் கட்ட கூடாது.
9.அடித்தளத்தை நிரப்புதல் ( Filling of Basement )
பேஸ்பெல்ட் வேலை முடிந்த பிறகு பேஸ்மென்ட் பள்ளத்தை கிராவல் கொண்டு நிரப்பவும்.நிரப்பப்பட்ட பிறகு நன்றாக தண்ணீர் விட்டு இறுகச் செய்ய வேண்டும் (Consolidation ). அதற்கு மேலே 1.1/2 ஜல்லி போட வேண்டும்.
10. கட்டுவேலை_ Brickwork
தாய்சுவர் 9” சுவரும் உட்சுவர் 5” சுவரும் கொண்டு கட்டப்பட வேண்டும். ஜன்னல்கள் வரும் இடங்களில் கட்டுவேலையில் இடைவெளி விட்டு கட்ட வேண்டும். 7 அடி உயரத்தில் LINTEL BEAM லிண்டெல்பெல்ட் போட வேண்டும். அதனுடன் ஒரு ரூமுக்கு ஒரு பக்கம் மட்டும் லாஃப்ட் ( LOFT ) போட வேண்டும். மச்சி தேவைபட்டால் போட வேண்டும். ( LOW ROOF ).
11. ரூஃப் ஜல்லி_Roof Concrete
ரூஃப் ஜல்லி 5” உயரம் இருக்க வேண்டும். ரூஃப் ஜல்லி போடப்பட்ட 21வது நாள் சென்ட்ரிங் பிரிக்க வேண்டும்.ரூஃப் ஜல்லி ஸ்லாப் கட்டாயமாக 21 நாட்கள் நீராற்றுதல் ( Curing ) வேண்டும். பிறகு கைப்பிடி சுவர் 3 அடி உயரம் போட வேண்டும். ரூஃப் ஜல்லி மேற்பரப்பு மழை நீர் வாட்டம் காட்டி சிமென்ட் தரை போட வேண்டும். அல்லது weathering tile போட வேண்டும்.
12. பூச்சு வேலை ( PLASTERING )
பூச்சு வேலை செய்வதற்கு முன் ஆசாரி வேலை ( CARPENTRY WORK ), எலக்ட்ரிக்கல் வேலை( ELECTRICAL ), முடிக்கப்பட வேண்டும். பூச்சு வேலை முடிந்ததும் பிளம்பிங் வேலை ( PLUMBING ),ரூம் செல்ஃப் கட்ட வேண்டும்.
மேற்கண்ட வேலையை முடித்த பிறகு
உள்புறம் 2 COAT PUTTY பார்த்த பிறகு டைல்ஸ் போட வேண்டும்.
அதற்கு பிறகு கதவுகள் (Doors ) போட வேண்டும். பிறகு பெயிண்ட் வேலை செய்து வீட்டின் கட்டுமான வேலையை முடிக்க வேண்டும்.
Good work sir
ReplyDeleteTHANK YOU SO MUCH
DeleteGreat easy-to- explain👍🤝
ReplyDeleteTHANK YOU SO MUCH
DeleteVery nice sir good job👍
ReplyDeleteTHANK YOU SO MUCH
DeleteSuper
ReplyDeleteTHANK YOU SO MUCH
DeleteSuper Sir..
ReplyDelete